மதுரையில் விபத்தில் இறந்த கபடி வீரருக்கு விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சத்திற் கான காசோலை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 30 December 2023

மதுரையில் விபத்தில் இறந்த கபடி வீரருக்கு விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சத்திற் கான காசோலை.


மதுரை வண்டியூரை சேர்ந்த பாலமுருகன். பில்டிங்க் காண்டிராக்டர். இவருக்கு, சரவணக்குமார் என்ற மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இதில், சரவணக்குமார் விருதுநகர் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயர் முடித்து.  இரண்டு வருடமாக வேலை பார்த்து வருகிறார்.

சரவணக்குமார் 6ம் வகுப்பில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளவர். கடந்த சில வருடங்களாக மாநில அளவிலான கபடி  போட்டிகளில் விளையாடி  பல்வேறு பரிசுகளை குவித்துள்ளார். கடந்த 9.10. 2023 ல் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு அகால மரணமடைந்தார். அவருக்கு இன்று வண்டியூரில் மவுன அஞ்சலி செலுத்த அவருடன் விளையாடிய விளையாட்டு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநிலத்தலைவர் சோலை ராஜா தலைமையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


பின்னர், இறந்த கபடி வீரருக்கு விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் 5லட்ச ரூபாய்க்கான காசோலையை  தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநிலத் தலைவர் சோலை ராஜா, வேலம்மாள் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி மணிவண்ணன், ராயல்சுந்தரம் இன்சூரன்ஸ் கிளை மேலாளர் பாலமுருகன் பொதுநல காப்பீட்டு அதிகாரி தாயுமானசுந்தரம் ஆகியோர் வீரரின் தந்தை  தந்தை பாலமுருகனிடம் வழங்கினர். தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad