தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சேதம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 8 November 2023

தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சேதம்.


தமிழகத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக  பல்வேறு பகுதிகளில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பகுதிகளில் நடவு செய்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால் சேதமடைந்துள்ளது. 

குறிப்பாக ,இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்து தற்போது, அறுவடைக்கு தயாராக இருந்தது இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல்களில் உள்ள நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால்,  விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 


குறிப்பாக, ஒருபோக சாகுபடி மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என்ற சூழ்நிலையில், கிணற்று பாசனத்தில் நடவு செய்து அறுவடை காலத்தில் மழை பெய்ததால் ஏக்கருக்கு 30,000 முதல் 50 ஆயிரம் ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆகையால், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு சேதம் அடைந்த நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad