கடந்த இரண்டு ஆண்டுகளில்அதிக அளவில் எஸ் சி எஸ் டி வன்கொடுமை வழக்கு பதிவு தகவல் அறியும் உரிமைச் சட்ட.பதிலால் சமூக ஆர்வலர் வேதனை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 18 November 2023

கடந்த இரண்டு ஆண்டுகளில்அதிக அளவில் எஸ் சி எஸ் டி வன்கொடுமை வழக்கு பதிவு தகவல் அறியும் உரிமைச் சட்ட.பதிலால் சமூக ஆர்வலர் வேதனை.


கடந்த 2021/2022 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நான்கு மாவட்டங்களில் 465 எஸ்சி எஸ்டி வன்கொடுமை வழக்கு பதிவு அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில், 165 வழக்கு பதிவு சமூக ஆர்வலர் வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ,தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்கு பதிவுகள் தொடர்பான ஆர்டிஐ தகவலில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து, வழக்கறிஞர் சந்தானம் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்ட தகவலின் அடிப்படையில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் வன்கொடுமை வழக்கு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அதில், எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்கு அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 165 வழக்குகள் பதிவாகியுள்ளன. 


விருதுநகரில் 107 வழக்குகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 107,வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 106 வழக்குகளும், பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தேனி, திருநெல்வேலி மாவட்டங்கள் தகவல்களை வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், வன்கொடுமை வழக்குகளில் எஃப் ஐ ஆர் பதிவு செய்தவுடன் வழங்கப்பட வேண்டிய முதல் நிவாரணத் தொகையும் முறையாக வழங்கப்படுவது இல்லை என்றும், வழக்குகளின் தீர்ப்பை பொறுத்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். 


மதுரை மாவட்டத்தில் பதிவாகியுள்ள 125 வழக்குகளில் 8 கொலை வழக்குகளும் ,மூன்று போக்ஸோ வழக்கும் ஒரு கொத்தடிமை வழக்கும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு ஏடிஜிபி அறிக்கையின்  படி, மதுரை மாவட்டத்தில் 43 கிராமங்களில் ஜாதிய தீண்டாமை நடைபெறுவதாகவும், தமிழகத்திலே முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, காவல் துறையினர் சாதிய மனோபாவத்தை போக்கி நல்லிணக்கத்தை உருவாக்க விழிப்புணர்வு கூட்டங்களை அதிக அளவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமை படுகொலை செய்யப்பட்டவர்கள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண தொகையோடு அரசு வேலை, மாத ஊதியம் மற்றும் நிலம் ஆகியவை முழுமையாக உடனடியாக கிடைக்க பெற ஆவணம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் சந்தானம் கருத்து தெரிவிக்கின்றார்‌. 

No comments:

Post a Comment

Post Top Ad