பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரி அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் தரையில் அமர்ந்து தர்ணா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 27 November 2023

பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரி அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் தரையில் அமர்ந்து தர்ணா.


மதுரை மாவட்டம், திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர் 56 கிராம கால்வாய் ஆகியவற்றுக்கு தண்ணீர் திறக்க கோரி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால், சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில், கள்ளந்திரி பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர் 56 கிராம கால்வாய் ஆகியவற்றுக்கு பாசன வசதிகள் மேற்கொள்ள தமிழக அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், இதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என,  என்றும் முன்னால் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கட்சி நிர்வாகிகள் சென்று, மதுரை மாவட்ட ஆட்சியை சங்கீதாவிடம், மனு அளித்தார்.


அத்துடன் திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து கோசமிட்டபடி தன்னால் ஈடுபட்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad