மாணவன், பேருந்து நடத்துனர் தாக்கியதாக கண்டித்து போராட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 28 November 2023

மாணவன், பேருந்து நடத்துனர் தாக்கியதாக கண்டித்து போராட்டம்.


மதுரை, வில்லாபுரம் அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள்  நடத்துனரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து-அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கண்டனம் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை காரியாபட்டி அருகே உள்ள பல்லாவரராயநேந்தல் கிராமத்தில் இருந்து  பெரியார் நோக்கி வந்த பேருந்தை திருப்பரங்குன்றம் பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மற்றும் நடத்துனர் ஈஸ்வரன் சுமார் 80  பயணிகளுடன் பெரியார் பேருந்து நிலையம் நோக்கி வந்தனர்.


பெரியார் நோக்கி சென்று கொண்டு இருந்த  அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் இருவர் ஏறி வெகுநேரமாக படியில் நின்று கொண்டு பயணித்ததால், அரசு பேருந்து நடத்துனர் ஈஸ்வரன் அவர்களை பஸ்ஸின் உள்ளே வர அழைத்துள்ளார். உடனே, பள்ளி மாணவர்கள்  நடத்துனரை நீ வேனா, இங்க வாடா என்று ஒருமையில் பேசியுள்ளனர். இதை கண்ட பயணிகள் அந்த பள்ளி மாணவர்களை ஏன் இப்படி பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். 


அதற்கு  பள்ளி மாணவர்கள் நடத்துனரை ஓவரா பேசினால் உன்னை அடிப்பேன் என்று பயணிகளையும் ஒருமையில் பேசி உள்ளனர். இதில், ஆத்திரமடைந்த நடத்தினார் ஈஸ்வரன் உடனடியாக பள்ளி மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியே இறங்கும்படி கூறியுள்ளார். உடனடியாக மாணவர்கள் நடத்துனர் ஈஸ்வரனிடம் தகராரில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் இருவரும் சேர்ந்து தாக்கியதில் நடத்துனர் ஈஸ்வரன் கையில் காயப்பட்டார், நடத்துனர் ஈஸ்வரன் தாக்கப்படுவதை அறிந்த ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார்.


அரசுப் பேருந்து ஓட்டுனர் தாக்கப்படுவதை அறிந்த அவழியாகச் சென்ற மற்ற அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஆங்காங்கே அரசு பேருந்துகளை ஓரமாக நிறுத்தி அம்மாணவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ,தகவல் அறிந்து வந்த தெற்கு வாசல் காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துவதிலும் பேசி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால், மதுரை விமான நிலையம் பெரியார் பேருந்து நிலையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad