மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் தேனூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார் கூட்டத்திற்கு மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன்தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் கருப்பையா தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் வெற்றிவேல் மாநில நிர்வாகி துரை தன்ராஜ் ஆகியோர் வரவேற்பு உரையாற்றினார்கள் கூட்டத்தில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தேனூர் சமயநல்லூர் தொடனேரி கட்ட புளி நகர் பொதும்பு அதலை வயலூர் அரியூர்பாசிங்காபுரம் ஆகிய கிளை கழகங்களில் இருந்து நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் சார்பு அணியினர்கலந்து கொண்டனர் கூட்டம் முடிவில் தேனூர் சோனைமுத்து பாஸ்கரன் ஆகியோர் நன்றி கூறினர்
No comments:
Post a Comment