மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கை காண கனவு நிறைவேற இருக்கின்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 24 November 2023

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கை காண கனவு நிறைவேற இருக்கின்றது.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்  தேவர் சிலையிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் இருக்கிறது. இது நீண்ட காலமாக ஒரு வழித்தடமாக இருந்தது. இப்பொழுது அதிக ரயில்கள் விடப்பட்டுள்ளதால் இப்பொழுது இரட்டை அகல ரயில் பாதை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ரயில்கள் வந்து செல்கின்றன, விரைவு ரயில்கள் மற்றும் அதிவேக விரைவு ரயில்கள் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கும், வட மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் செல்ல ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தினந்தோறும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள்  என்று அனைவரும் ரயில்வே கேட்டில் நின்று செல்வதால் அவர்களுக்கு தாமதம் ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு பலமுறை அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் மாவட்ட ஆட்சியர், முதல்வர், பிரதமர், என அனைவரிடமும் கோரிக்கை மனுவை கொடுத்தும் எந்த ஒரு பலனும் இல்லை. 


இதற்கு முந்தைய ஆட்சி இருந்த பொழுது ரயில்வே மேம்பாலத்திற்காக இரண்டு முறை பூமி பூஜை போடப்பட்டது . ஆனால் ஆட்சி மாறிய பின் அதுவும் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இரயில்வே பாதையை கடந்து சில‌கிராமங்கள் உள்ளன. கிராமப்புற மக்கள் மருத்துவம் மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளுக்காக திருமங்கலம் வருகின்றனர். பக்கத்து கிராமங்களில்  இருந்து சிலநேரம் உடல் நிலை சரியில்லாத  நிலை ஏற்பட்டு ஆம்புலன்ஸில் நோயாளிகள் மிகவும் அவதிபடுகின்றனர்.  


சில நேரங்களில் ஆம்புலன்ஸ் ரயில்வே கேட்டில் மாட்டிக் கொள்கின்றது இதனால் மரணம் ஏற்படும் சூழ்நிலை உருவாகின்றது.இதை கருத்தில் கொண்டு தமிழக சட்டசபையில் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில்  ரயில்வே மேம்பாலம் இல்லாத இடங்களில் அங்கே ரயில்வே மேம்பாலம் வரும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில்  திருமங்கலம் மக்களின் நீண்ட நாள் கனவு பலித்தது. இதற்கான பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது. இந்த மேம்பாலத்திற்கான மாற்றுப்பாதை மற்றும் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்று திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad