டாஸ்மாக் விற்பணையாளரை மிரட்டி பணம், பாட்டில்கள் கொள்ளை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 26 November 2023

டாஸ்மாக் விற்பணையாளரை மிரட்டி பணம், பாட்டில்கள் கொள்ளை.


சோழவந்தான் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ஒரு லட்சம் பணம் மற்றும் 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கொள்ளை சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழவந்தான் அருகே இரும்பாடியில் உள்ள அரசு மதுபான கடையில்  விற்பனையாளரை தாக்கி ஒரு லட்சம் மற்றும் 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கொள்ளையடித்த மர்ம நபர்கள் சோழவந்தான் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சோழவந்தான் பகுதிகளில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி பிரிவில் அருகருகே இரண்டு  அரசு மதுபான கடைகள் உள்ளது. இதில், வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத் தான் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் வயது 49 .என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு டாஸ்மாக் கடைக்கு அருகில் இருந்த கருப்பட்டி ரயில் நிலையம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் வந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனத்திலேயே அரசு மதுபான கடைக்கு அழைத்துச் சென்று  கடையை திறக்க சொல்லி மிரட்டியதாகவும், இதனால் பயந்த விற்பனையாளர் கடையை திறந்து நேற்று மதுபானங்கள் விற்றதில் வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் 180 குவாட்டர் பாட்டில்களையும் எடுத்துச் சென்றதுடன், விற்பனையாளரையும் தாக்கி விட்டு, சென்றதாக தெரிகிறது. 


இது குறித்து, சோழவந்தான் காவல் நிலையத்தில் கணேஷ் குமார் புகார் அளித்த பின்பு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு சென்று  வெளி நோயாளியாக முதலுதவிசை சிகிச்சை செய்து வீட்டிற்கு சென்றுள்ளார். இது குறித்து, அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், கஞ்சா மது போன்ற சமூக விரோத செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த டாஸ்மாக்கில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதாகவும் ஆகையால் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து குற்ற செயல்களில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad