இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த திலகர்திடல் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து, உயிரிழந்த மணிகண்டனின் மனைவி மீனா(38) அளித்த புகாரின் கீழ் திலகர்திடல் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து ,மதுரை மாநகர் எம். கே. புரத்தைச் சேர்ந்த நாகராஜ் (28)மற்றும் சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (24) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை நகர் மற்றும் மாவட்டங்களில், ஆட்டோக்கள் பல உரிய உரிமம் மற்றும் தகுதிச்சான்று இன்றி, அரசு சிட்டி பஸ் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, மதுரை மாவட்ட போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் புகார் வந்தும் ,உரிய அனுமதியின்றி இயக்கப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் நகரில் அதிக வேகமாகவும் உரிய சாலை விதிகளை கடைபிடிக்காமல் தொடர்ந்து இயக்கி வருவதாக பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை அருகே கருப்பாயூரணி, அண்ணா பஸ்நிலையம், அரசு மருத்துவமனை, சிம்மக்கல், ஆரப்பாளையம் பஸ் நிலைய நிறுத்தங்கள் அருகே ஆட்டோக்களை, போலீஸாருக்கு தெரிந்தே பயணிகளை அதிகளவில் ஏற்றி வருகின்றனராம். அத்துடன், ஆட்டோக்களில் அதிக பயனிலை ஏற்றுக்கொண்டு அரசு பஸ் டிக்கெட் இறக்குவதும், ஏற்றுவதும் வாடிக்கையா கொண்டுள்ளனர். இதனால், அரசு பஸ்களுக்கு செல்லும் முதியோர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து, மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன், மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர்,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உரிய கவனம் செலுத்தி, விதிகளை மீறும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment