சாலை வசதிகள் கோரி, பெண்கள் சேற்றில் இறங்கி நாற்று நடும் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் அருகே உள்ளது சந்தோஷ் நகர் விரிவாகப் பகுதியான, சந்தோஷ் நகரில் ராணி மங்கம்மாள் நகர் ,ஜே ஜே நகர், மகாலட்சுமி நகர், மல்லிகை தெரு உள்ளிட்ட ஐந்தாயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். தற்போது, பெய்து வரும் தொடர் மலையால், ஏற்கெனவே, குண்டு குழியுமான சாலை மேலும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாமல் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
இதனால், இப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியில் செல்ல முடியாத நிலையில் தீவில் வசிப்பது போல் தவித்து வருகின்றனர். மதுரை நகரில், இதே போல பல வார்டுகளில் உள்ளது. மாநகராட்சியின் சார்பில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடப்படாததால், மழை நீரும், சாக்கடை நீரும் குளம் போல தேங்கியுள்ளன. மதுரை நகரில், கடந்த சில நாட்களாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தாலும், மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர் கள், மாநகராட்சி பொறியாளர்கள் கண்டு கொள்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மங்கம்மாள் நகரிலிருந்து மெயின் ரோடு வர ஒன்றை கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் ஆட்டோக்கள் வர மறுக்கின்றனர். மேலும் சேரும் சகதியில் சிக்கி வண்டியை மீட்க முடியாத நிலையில் உள்ளதால் கேஸ், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களும் உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது. இந் நிலையில் இப்பகுதி மக்கள் சாலை வசதி, சாக்கடை ,குடிநீர் வசதி செய்து தரக்கோரி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் பல்வேறுமுறை மனு செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியின் கடைசி வார்டான நூறாவது வார்டு நகரின் கடைசிபகுதியாக உள்ளது. ராணி மங்கம்மாள் நகர் சந்தோசம் நகர் உள்ளிட்ட இப்பகுதி மக்கள் தற்போது தொடர் மழையினால் மிகவும் சிரமத்தில் உள்ளனர் பல்வேறு முறை மாவட்ட நிர்வாகத்திடமும் மாநகராட்சியில் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று இப்பகுதி மக்கள் சேற்றில் இறங்கி நாற்றுநடும் போராட்டம் நடத்தினர். உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை அமைத்து தர மறுத்து விட்டால் விரைவில் சாலை மறியல் செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.
இதே பகுதியை சேர்ந்த சுந்தரி என்பவர் கூறுகையில் கடந்த 12 வருடங்களாக இங்கு வசித்து வருகிறோம் சாலை சாக்கடை குடிநீர் போன்ற இந்த வசதியும் இல்லை தண்ணீரே விலைக்கு வாங்கி தான் குடிக்க வேண்டிய நிலைமையில் உள்ளது, தற்போது பெய்து வரும் தொடர்மழை இதனால் குண்டு குழிப்பான சாலையில் கேஸ் மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் உள்ளே வர மறுக்கின்றனர். ஆகையால் மிகவும் சிரமத்தில் உள்ளோம் என்று கூறினார்.
தமிழ்ச்செல்வி என்பவர் கூறுகையில் 10 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும் மதுரை மாநகராட்சி இடம் பல்வேறு முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை தனது கணவருக்கு டயாலிசிஸ் ஈசி மற்றும் மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோக்கள் உள்ளே வருவதில்லை என்றும் இதனால் மிகவும் சிரமத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment