மதுரை அயன்ப்பாப்பாகுடி கண்மாய் மறுகால் பாய்வதால் கடந்த 5 நாட்களாக நுரை வெளிவர தொடங்கிய நிலையில்., நுரைக்கு திரை போட்ட மாநகராட்சி அதிகாரிகள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 10 November 2023

மதுரை அயன்ப்பாப்பாகுடி கண்மாய் மறுகால் பாய்வதால் கடந்த 5 நாட்களாக நுரை வெளிவர தொடங்கிய நிலையில்., நுரைக்கு திரை போட்ட மாநகராட்சி அதிகாரிகள்.


மதுரை அவனியாபுரம் அருகே உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாய் மறுகால் பாயும் தண்ணீரில் கழிவு நீர் கலந்து கடந்த ஐந்து தினங்களுக்கு மேல் மலை போல் எழும்பி பொங்கி வரும் நுரை காற்றில் கலந்து  அவனியாபுரம் - விமானநிலைய சாலையில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில்., கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் மறுகால் பாயும் போது ஏற்படும் வெண்ணிற நுரை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக இதே நிலை ஏற்பட்டுள்ளதால் பலமுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட பிறகும் வெண்ணிற நுரை வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும்., மாநகராட்சி அதிகாரிகள் மறுகால்வாய் பகுதியில் நேற்று மாலை முதல் திரை போட்டு தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.


அடிக்கடி ஏற்படும் அயன் பாப்பாக்குடி கண் வாயில் இருந்து வெளியேறும் நீரினால் வெண்ணிற நுரை ஏற்படுவதை கட்டுப்படுத்த கண்மாயில் உள்ள ஆகாய தாமரையை அகற்றினாலே இப்பிரச்சனை சரி செய்ய முடியும் என்று நீர்வள ஆவலர்கள் தெரிவிக்கின்றனர். ஆகாயத்தாமரையில் இருந்து பாசம் போன்று வெளியாகும் வேதிப்பொருளால் மறுகால் பாயும் போது நுரை எழும்புவதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad