விவசாயிகளுக்கு மானியத்தில் 1500 தென்னை மரக்கன்றுகள் வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 6 November 2023

விவசாயிகளுக்கு மானியத்தில் 1500 தென்னை மரக்கன்றுகள் வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாரம் நெடுங்குளத்திலும் மதுரை மேற்கு ஒன்றியத்தில் தோடனேரியிலும் 150 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையில் தென்னைமரக்கன்று வாங்குவதற்கு பரவை ஜி.ஹச்.சி.எல் மீனாட்சி மில்ஸ் நிறுவனத்தின்  சார்பாக 1500 தென்னை மரக்கன்றுக்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்ட வருவாய் கோட்டாசியர் ஷாலினி தலைமை தாங்கி, மரக்கன்றுகள் வழங்கினார். துணை  இயக்குநர் அமுதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி இயக்குநர் கமலலெஷ்மி வரவேற்றார். இதில், உதவி இயக்குநர்கள் பாண்டி,  பாலமுருகன், வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை உதவி அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள். முடிவில், சமூக பொறுப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad