அதன் பொருட்டு மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 2023-24 ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் அக்டோபர் 9ம்தேதி தொடங்கி 14ம்தேதி வரை நடைபெற்றது. பள்ளி அளவில் 63200 மாணவர்கள் சுமார் 180வகையான போட்டிகளில் பங்கு கொண்டு முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.
வட்டார அளவிலான போட்டிகள் அக்டோபர் 18முதல் 21ம்தேதிவரை அந்த அந்த ஒன்றியங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்று முடிந்து உள்ளது.வட்டார அளவில் 20000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு 6700மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு கொள்கின்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 26முதல்28ம் தேதி வரை மதுரை செளராஸ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை இ.எம்.ஜி.யாதவா பெண்கள் கல்லூரி மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் மா.செள.சங்கீதா அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா கார்த்திகா, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை குத்து விளக்கு ஏற்றி மிகச் சிறப்பாக தொடங்கி வைத்தார் நிகழ்வில் அனைத்து ஒன்றியங்களின் சார்ந்த வட்டார அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 6800 மாணவ மாணவிகள் ஒன்பது வகையான கலை இனங்களில் 188 போட்டிகளில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 28.10.23 போட்டியின் இறுதி நாளன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வணிகவரி துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

No comments:
Post a Comment