மதுரை மாநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 15 October 2023

மதுரை மாநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது.

காய வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளில்‌ கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில்‌ செயல்பட்டு வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், மேலும் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை வழக்குகளில்‌ கண்காணிப்பிற்கு  வந்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில்‌ செயல்பட்டு வந்த மதுரை மாநகரைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய இருவரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,  மதுரை மாநகர காவல்‌ ஆணையர்‌ லோகநாதன் உத்தரவின்‌ பேரில்‌, முத்துக்குமார் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் மதுரை மத்திய சிறையில்‌ "குண்டர்‌"  தடுப்புச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ அடைக்கப்பட்டனர்‌. 

No comments:

Post a Comment

Post Top Ad