இதில் கருவரையில் இருந்து வகுப்புபரை வரை என்று சொல்லி மாணவ மாணவியர்களிடம் உரையாற்றினார். இதில் அனைவரும் கண்கலங்கி தனது தாய் தந்தையர்க்கு நன்றி தெரிவித்தனர். மேலும் பி.ஐயப்பன் பி.காம். பேசுகையில் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு செல்போன்கள் தான் காரணம் மேலும் அவர்கள் அதில் இருக்கும் நல்லது கெட்டது எது என்று தெரியாத வயது என்று கூறினார்.
ஒரு பாடத்தை நன்றாக கவனித்து அதற்குரிய அர்த்தங்களை புரிந்து விட்டாலே நாம் தேர்வுகளை எளிதாக வென்று விடலாம் என்றும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற எம்.ஜி.ஆர் திரைப்பட பாடல் வரிகளை எடுத்து கூறினார். ஆசிரியர்கள் கொடுக்கும் குறிப்புகளை எடுத்து வைத்து அதற்கு தகுந்தார் போல் படித்தால் நிச்சயம் தேர்வில் பல மடங்கு வெற்றி உண்டு என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் கே. கார்த்திகா, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சி.நல்லு மற்றும் ஆசிரியர்கள் உசிலம்பட்டி அதிமுக நகர, ஒன்றிய செயலாளர்கள் திருமங்கலம் நகர செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment