மருது சகோதரர்களின் 222வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்து சிவரக்கோட்டையில் திரு உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் ஆன ஆர்.பி.உதயக்குமார் மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் ஊர் பொதுமக்கள் அனைவரும் முளைப்பாரி தூக்கி வந்தும் பாக்குடம் ஏந்தி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்சியில் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் மூ.சி.சோ.முருகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், தமிழ்ழகன், வெற்றிவேல், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சேர்மன் லதாஜெகன், கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், சுமதி சுவாமிநாதன், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment