வலசை கிராமத்தில் ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா மண்டல அபிஷேக விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 20 October 2023

வலசை கிராமத்தில் ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா மண்டல அபிஷேக விழா.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அழகிநாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கான மண்டல அபிஷேக விழா நேற்று நடந்தது.


இதற்காக நடைபெற்ற யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மூன்று கால பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க  பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மண்டல அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் , அன்னதானம் வழங்கப்பட்டது.  பொருசுப்பட்டி திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad