அதன் அடிப்படையில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 52 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் காலம் சென்ற முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ராமச்சந்திரன் ஜெயலலிதா அவர்களின் பெயர் நிலைத்திருக்கும் படி மக்கள் இதயத்தில் வைத்து உள்ளனர். அதன் அடிப்படையில் இன்று அதிமுக கட்சியின் 52 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள அதிமுக அலுவலகங்களில் கொண்டாடப்பட்டது, இதில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளாரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.ஐயப்பன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருமங்கலத்தில் தேவர் சிலை முன்பு மதுரை மாவட்ட புறநகர் மாவட்ட பொருளாளர் ரவி தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர செயலாளர்கள், நகர நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் சார்பு அணி செயலாளர், கட்சி முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment