சோழவந்தான் மற்றும் அலங்காநல்லூர் கொண்டைம்பட்டியில், ஏ ஐ டி யு சி 104 ஆம் ஆண்டு துவக்க விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 31 October 2023

சோழவந்தான் மற்றும் அலங்காநல்லூர் கொண்டைம்பட்டியில், ஏ ஐ டி யு சி 104 ஆம் ஆண்டு துவக்க விழா.


மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில் ஏ. ஐ.டி.யு.சி. கட்டுமான சங்கத்தின் 104 ஆவது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது, மாவட்டச் செயலாளர் தாமஸ் கொடியேற்றி, சிறப்புரையாற்றினார். கிளை செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். 

மாவட்ட நிர்வாக குழு ராமர், கிளை பொருளாளர் சுரேஷ் ,மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆட்டோ தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக ஏ. ஐ. டி .யு .சி. சங்கத்தின் 104ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். திரௌபதி அம்மன் கோவில் வடக்கு தெரு அருகில் மாவட்டத் தலைவர் ஜோதிராமலிங்கம், ஏ. ஐ.டி.யூ. சி. சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.


விழாவிற்கு, சங்கத்தின் பொருளாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார் முன்னில வகித்தார். தலைவர் ரவி, இனிப்பு வழங்கினார். செயலாளர் ராமர் நன்றி தெரிவித்தார். விழாவில், ஜெனகை மாரியம்மன் ஆட்டோ தொழிலாளர் நலச் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad