தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 28 September 2023

தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா.

சோழவந்தான் அருகே தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா  நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு  சுந்தர வள்ளி அம்மன் சிறிய கோவிலில் இருந்து பெரிய கோவிலுக்கு அம்மன் வந்து சேர்தல். அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர்.


மறுநாள் காலை அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி ஏழு கரகாரர்கள் முன்னிலையில் சக்தி கிரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் வீதிஉலா நடைபெற்றது வழிநெடுக அம்மனுக்கு பூஜைகள் செய்து அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினார்கள் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக சேத்தாண்டி வேஷம் மற்றும் கரும்புள்ளி செம்புலி குத்தி அம்மன் உடன் வந்தனர். 


இரவு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளி விடிய, விடிய பவனி வந்து அதிகாலை சிறிய கோவிலில் வந்து சுந்தரவள்ளிஅம்மன் வந்து சேர்ந்தது .விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad