சோழவந்தானில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 23 September 2023

சோழவந்தானில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்து, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 295 பேருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 47 பேருக்கும் வழங்கினார். 


அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தீபா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் முன்னிலை வகித்தனர்.  பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன், திமுக பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகா வீரபாண்டி, வசந்த கோகிலா சரவணன், திருவேடகம் ஊராட்சி மன்றத் தலைவர், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சோலை கேபிள் ராஜா, பேரூர் அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், மாணவரணி எஸ் ஆர் சரவணன் மேலக்கால் பன்னீர்செல்வம், 18 வது வார்டு செயலாளர் சங்கரபாண்டி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சந்தான லட்சுமி, சசிகலா சக்கரவர்த்தி, பேரூர் இளைஞரணி முட்டை கடை காளி தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் மேலக் கால் ராஜா, மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad