வாடிப்பட்டி அரசு பள்ளிகளில், மாணவ-மாணவிகளுக்கு 317 விலையில்லா மிதிவண்டிகள். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் வழங்கினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 26 September 2023

வாடிப்பட்டி அரசு பள்ளிகளில், மாணவ-மாணவிகளுக்கு 317 விலையில்லா மிதிவண்டிகள். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் வழங்கினார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், நடந்த நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் எட்வட் ராஜா தலைமை தாங்கினார். 


ஒன்றியச் செயலாளர் பாலராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிதலைமை ஆசிரியர் விஜயரெங்கன் வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் 116மாணவர்களுக்கு, மிதிவண்டிகள் வழங்கினார். 


இதில், வழக்கறிஞர் கோகுல்நாத், முரளி, உடல்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், ஸ்டாலின், விவசாய ஆசிரியர் சுரேஷ்,   உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார். அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சர்வோதயா சுந்தரராஜன், ரெங்கசாமி, ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிதலைமை ஆசிரியர் பிரேமா வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன், 143மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். 


இதில், கணினிஆசிரியர் கார்த்திக் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர். முடிவில், உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் நன்றிகூறினார். பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல் நிலைப் பள்ளியில், நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் விஜயக்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஐ.கே.குருநாதன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் 58 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.  


இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்விஆசிரியர் பி.ஜி.ராஜா நன்றிகூறினார்.  

No comments:

Post a Comment

Post Top Ad