ஆடுகளை திருடும் கும்பலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகள் பொருளாதார அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 20 July 2023

ஆடுகளை திருடும் கும்பலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகள் பொருளாதார அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏரா ளமானோர் ஆடுகள் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மை காலமாக ஆடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது திருடர்கள் ஆடுகளை திருடி வருகின்றனர். 

கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான் பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமாரி (50). சம்ப வத்தன்று இவர் தனது ஆடுகளை தோட்டத்தில் கட்டியிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடிச்சென்றனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தம்மைய நாயக்கர் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆடு திருடு ேபானது. கள்ளிக் குடியை அடுத்துள்ள கே.வெள்ளாகுளம் கிராமத்தில் முத்தையா என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். 


இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேற்கண்ட பகுதிகளில் ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே ஆடு திருடும் நபர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசா ருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad