மதுரை மாநகராட்சியில், குழு உறுப்பினர்கள் தேர்வு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 28 July 2023

மதுரை மாநகராட்சியில், குழு உறுப்பினர்கள் தேர்வு.


2023 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல் விதி எண் 270(3) விதியின்படி, மதுரை மாநகராட்சிக்கான வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் கீழ்க்கண்ட மாமன்ற உறுப்பினர்கள் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.  


பின்வரும் உறுப்பினர்கள் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மு.இராமமூர்த்தி, மா.செந்தில்குமார், எல்.அந்தோனியம்மாள், பா.கஜேந்திரகுமார், ரா.மாலதி, சு.ஜானகி, த.சி.நாகநாதன், ஜோ.காளிதாஸ், ர.சிவசக்தி ரமேஷ் இத்தகவலை மதுரை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட குழு உறுப்பினர்களை, மேயர் இந்திராணி, ஆணையாளர் கே.ஜே. பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் வாழ்த்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad