சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 24 July 2023

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு.

தமிழகத்தின் பல பகுதிகளில் ஆடி மாதம் பிறந்தவுடன் ஆடி காற்று வீசி வரும் நிலையில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பழமையான  மரங்களின் கிளைகள் ஓடிந்து கீழே விழுவதும் இதனால் ஒரு சில பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுமாக உள்ளது. சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில், வைகை ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள பாதையில் பழமையான நாவல் மரங்கள் உள்ளது இந்த மரங்கள் ஆடி காற்றுக்கு தாங்காமல் மரத்தின் கிளைகள் ஒடிந்து  மின் கம்பங்கள் மீது விழுந்ததில், சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய பணியாளர்கள் மின்  கம்பத்தின் மீது விழுந்த மரக் கிளைகளை அகற்றி மின் தடையை சரி செய்யும் பணிகளை மேற்கொண்டர். இதனால், மேலக்கால் கிராமத்தில் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம்  தடைபட்டிருந்தது. மின்சார வாரியம், கடந்த காலத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது, மின்சார வயர்கள் செல்லும் பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுவது வழக்கமாம்.


ஆனால், தற்போது ஒரு சில பகுதிகளை தவிர, மின்சார சப்ளை செல்லும் வயர்கள் இன் ஊடே செல்லும் மரக்கிளைகளை வயர் மேன் கள் ஆர்வம் காட்டுவது குறைவதால், காற்று காலங்களில், அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


மதுரை கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் பகுதிகளில், மின் வயரின் அருகே மரக்கிளைகள் குறுக்கிட்டும், மேலமடை மின்வாரியம் கண்டு கொள்ளாமல் உள்ளதாக, இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad