மேலக்கால் பகுதியில் அறிவிக்கப்படாத இரவு நேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 22 July 2023

மேலக்கால் பகுதியில் அறிவிக்கப்படாத இரவு நேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி.


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் திடீர் திடீரென மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, இரவு ஒரு மணிக்கு மின்சாரத்தை தடை செய்யும் மின்சார துறையினர் அதிகாலை 5 மணிக்கு மின்சாரம் வழங்குவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 


இரவு நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது, மின்சாரம் தடை செய்வதால் யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் மின்சார துறையினர் இருக்கின்றனரா, அல்லது  மேலிட உத்தரவால் தொடர்ச்சியாக மின்தடை செய்யப்படுகிறதா என்ற குழப்பத்தில் மக்கள் கேள்வி கேட்கின்றனர். மேலும், குழந்தைகளை வைத்திருப்போர் மின்தடை ஏற்பட்டவுடன் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீதிகளுக்கு வருவதால், இரவு நேரங்களில் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள்  நடக்கும் சூழல் இருப்பதாகவும் இதனால், தேவையில்லாத சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் நிலை உருவாகும் சூழல் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 


ஆகையால், மின்தடை ஏற்படுத்துவர்கள் முறையாக அறிவித்துவிட்டு மின்தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad