தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, அதிமுக சார்பாக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மதுரை பெத்தானியபுரத்தில்மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மூன்று மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் எம். எல். ஏ. ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், ஐ.டி. பிரிவு செயலாளர் ராஜ சத்யன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், அண்ணாத்துரை டாக்டர் சரவணன், நீதிபதி, சரவணன் மற்றும் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர்உள்பட 500க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை, மதுரையில் சாலைகள் மோசம் ஆகியவற்றை கண்டித்து கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment