தட்டுத் தடுமாறி வாசிக்கும் குழந்தைகளை, தன்னம்பிக்கையோடு வாசிக்க வைப்பது தான் இந்த வாசிப்பு இயக்கத்தின் நோக்கமாகும். மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், நேர்காணலில் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 35 மண்டல அளவிலான கருத்தாளர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.


இப்பயிற்சியினை இணை இயக்குனர் வை. குமார், தொழிற்கல்வி, SCERT மற்றும் ராமராஜ், துணை முதல்வர், DIET மதுரை மற்றும் மதுரை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (தொடக்க கல்வி) சரவண முருகன் ஆகியோர் பயிற்சியினை துவக்கி வைத்தனர். வாசிப்பு இயக்கத்தின் 7 மாநில கருத்தாளர்கள் முத்துக்கண்ணன், மோசஸ், அமுதாசெல்வி, ராஜமாணிக்கம், பாலகிருஷ்ணன், ரமேஷ் குமார், சப்திகா டோமிலா ஆகியோர் மண்டல அளவிலான பயிற்சியினை அளிக்கின்றனர்.
இப்பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரேம் நேவிஸ், அமுதா, தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப், முதுநிலை ஃபெல்லோ, ஜெரோம் பால் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment