திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் ஜூஸ் குடிக்க சென்ற போது டூவிலரில் இருந்து பணம் திருடிய சிசிடிவி காட்சி வைரல். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 18 July 2023

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் ஜூஸ் குடிக்க சென்ற போது டூவிலரில் இருந்து பணம் திருடிய சிசிடிவி காட்சி வைரல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கப்பலூர் சொக்கநாதன் பட்டி கிராமம் நடுத்தருவைச் சேர்ந்த கன்னையா மகன் பவுன்ராஜ் (68) இவர் நேற்று காலை திருப்பரஙகுன்றம் நகர கூட்டுறவு வங்கியில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார்.


பின்னர் திருமங்கலம் நோக்கி செல்லும் போது திருநகர் சீதாலட்சுமி மில்கேட் எதிரே உள்ள ஜீஸ் கடையில் ஜூஸ் குடிக்க வாசலில் வண்டியை நிறுத்தியுள்ளார். பவுன்ராஜ் ஜூஸ் குடித்துவிட்டு திரும்பவும் வண்டி யில் உள்ள பையில் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் காணமல் போனது தெரிய வந்தது, இதுகுறித்து பவுண்ராஜ் அளித்த புகாரின் பேரில் திருநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து. அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 


அதில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஒருவர் இருசக்கர வண்டியின் பவுச்சில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் திருடனை தேடி வருகின்றனர். பணம் திருடு போன சிசிடிவி வீடியோ  தற்போது வைரலாக பரவி வருகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad