திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த ஓராண்டில் 1000 டன் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து சாதனை; ஒரே நாளில் 33 லட்சத்திற்கும் மேல் ஏலம் நடத்தி சாதனை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 9 July 2023

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த ஓராண்டில் 1000 டன் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து சாதனை; ஒரே நாளில் 33 லட்சத்திற்கும் மேல் ஏலம் நடத்தி சாதனை.


திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள,  திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம்  முதற்கொண்டு வேளாண் விளைபொருட்களின் ஏலம் மிகச் சிறப்பாக நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. இதுவரை அவுரி, நெல், பாரம்பரிய நெல் ரகங்கள், உளுந்து, கம்பு, ஆமணக்கு, மிளகாய் வற்றல், இருங்கு சோளம், செங்கட்டான் சோளம், தேங்காய், தேங்காய் கொப்பரை, கொத்தமல்லி, பருத்தி, தட்டான் பயிறு, பாசிப்பயிறு, நிலக்கடலை, எள், குதிரைவாலி, மக்காச்சோளம், புளி, துவரை, கேப்பை, சூரியகாந்தி விதைகள், வெள்ளை துவரை ஆகிய 25 வேளாண் விளைபொருட்களை மறைமுக ஏலம் (இ-நாம்) மூலம் 1000 டன்கள் உச்சபட்ச விலையில் விற்று விவசாயிகளுக்கு உதவிகரமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


கடந்த 7ஆம் தேதி செங்கப்படை, அ.தொட்டியபட்டி, எஸ்.பி.நத்தம் கிராமங்களைச் சேர்ந்த நான்கு விவசாயிகளின் 28950 கிலோ இருங்கு சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ  39க்கும், குறைந்தபட்சமாக 38 க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ 1103170 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும்  செங்கப்படை  கிராமத்தை சேர்ந்த இரு விவசாயிகளின் 2686.400 கிலோ வரகு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ  40 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 107456 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் உசிலம்பட்டியைச்   சேர்ந்த ஒரு விவசாயியின் 29.300 கிலோ மிளகாய்வற்றல் கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 120 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 3809-க்கு வர்த்தகம் நடைபெற்றது.


மேலும் விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு, கொல்லவீரன்பட்டி, பெரியபூலாம்பட்டி, குன்னத்தூர், கிராமங்களை சேர்ந்த  ஆறு விவசாயிகளின் 6803.400 கிலோ  ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 122 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 120 க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ 820208 க்கு வர்த்தகம் நடைபெற்றது. அடுத்ததாக வாடகைக்குப் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 3840 கிலோ உளுந்து ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 71 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 272640-க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 21600 கிலோ செங்கட்டான் சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 47.50 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 1026000 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.


ஆக மொத்தம் இன்று இதுவரை என்றுமில்லாத வகையில் ஒரே நாளில் 64 டன் வேளாண் விளைபொருட்களை ரூ 3333283 க்கு திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் விற்று சாதனை படைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

No comments:

Post a Comment

Post Top Ad