மதுரையில் பட்டா மாறுதல் வழங்க பயனாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 1 July 2023

மதுரையில் பட்டா மாறுதல் வழங்க பயனாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.

மதுரை பாலமேடு அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய கோரி, வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இவரை, அழைத்து பேசிய அப்பகுதியை சேர்ந்த பெண் நில அளவையர் சந்திரா, பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் பணம் தந்தால் உடனடியாக மாற்றி தருவதாக கூறியுள்ளார். வேதனையடைந்த செந்தில், மதுரையிலுள்ள லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.சத்யசீலனிடம் லஞ்சம் குறித்து புகார் அளித்தார்.


லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில், ரசாயனம் தடவப்பட்ட பணம் ரூ.10 ஆயிரத்தை செந்திலிடம், சர்வேயர் சந்திரா அய்யங்கோட்டை பகுதியில் வைத்து வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பெண் நில அளவையர் சந்திராவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad