

வழக்கின் அடிப்படையில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தும், தற்போது வரை மீண்டும் ரயில் நிலையவளாகத்தில் மீன் சின்னத்தை நிறுவவில்லை. இதன் காரணமாக மீண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. எனவே, பாண்டியர்கள் ஆண்ட பாண்டிய பேரரசர்களின் நினைவை கூறும் வகையில் மீன் சின்னத்தை ரயில் நிலைய வளாகத்தில் மீண்டும் ரயில்வே அதிகாரிகள் வைக்க வேண்டும் என, தமிழர்கள் கட்சி மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் திருவள்ளுவர் சிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முறையாக மீண்டும் ரயில் நிலைய வளாகத்தில் மீன் சின்னத்தை நிறுவவில்லை என்றால், மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழர்கள் கட்சி மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment