மதுரை மாவட்டம் திருமங்கலம் டி.கல்லுப்பட்டி பகுதிகளில் புதிய நான்கு வழி சாலையை அகலப்படுத்தி சீரமைத்திடும் பணிகள் நடைபெற்று வருவதை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் பாரத் பிரயோஜன திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் கொல்லம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைத்திடும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டிலே மிக அதிகமான வளைவு நெளிவு கொண்ட தேசிய நெடுஞ்சாலை என்பதால் எண் 208 தற்போது இந்த திட்டத்தின் மூலம் அதிநவீன வசதிகள் கொண்ட நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதற்கட்டமாக ஆலம்பட்டி பகுதியில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே. தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.கே.பி சிவசுப்பிரமணியம், மு.சி.சோ.சி. முருகன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment