மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள திடீர் நகரில் கோயில் விழாவை ஒட்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இத் திருக்கோயிலில், கடந்த சில நாட்களாக திருவிழா நடந்து வருகிறது திருவிழாவை ஒட்டி பக்தர்களால், தேவி கருமாரியம்மனுக்கு, சிறப்பு அபிஷேக வழிபாடுகளும், ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், அழகு குத்தியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.


இதைத் தொடர்ந்து, உலக நன்மைக்காக கோவில் முன்பாக திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். இதை அடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, மதுரை திடீர் நகர் தேவி கருமாரியம்மன் ஆலய விழா குழுவினர் செய்தனர். விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை, திடீர் நகர் காவல் நிலையத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment