இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாலையில் தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் குழிகள் சரிவர மூடப்படுவது இல்லையாம். இதனால், அவ்வழியாக செல்லும் நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தோண்டப்பட்ட குழிகள் சிக்கி, அடிக்கடி அவதியூறும் நிலை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், மதுரை அண்ணாநகர் மேலமடை வீரவாஞ்சி தெரு, மதுரை மேலமடை வள்ளலார் தெரு ,காதர் மொய்தின் தெரு, அன்பு மலர் தெரு, ஜூபிலிடவுன் சாலைகளில், பள்ளங்கள் தோண்டப்பட்டு, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால், சரிவர மூடப்படுவதில்லையாம்.


இதனால் ,இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருவோர் சாலையில் தடுமாறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி சம்பந்தப்பட்ட அலுவலருக்கு புகார் தெரிவித்தும், தோண்டப்படும் சாலைகளை சரிவர மூட உத்தரவு பிறப்பிக்க, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் உறியடி நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment