மதுரை கலெக்டர் சங்கீதா அவர்கள் உத்தரவின் படி புதிதாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்காகவும், மேற்படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு உதவும் வகையிலும் வருவாய் துறை சான்றிதழ்களான வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பித்த உடன் விசாரித்து உடனடியாக தருவதற்காக சிறப்பு முகாம் திருமங்கலம் தாலுகாவில் இரண்டு இடங்களில் இன்று (ஜூன் 23-) நடக்க உள்ளது.


திருமங்கலம் மதுரை ரோட்டில் பி.கே.என்., ஆண்கள் பள்ளி மற்றும் செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் இந்த முகாமில் தேவைப்படும் சான்றிதழ்களை தேவைப்படுவோர் அங்கேயே சென்று விண்ணப்பிக்கலாம். ஒரே இடத்தில் அனைத்து அலுவலர்களும் இருந்து சான்றிதழ்களை விசாரணை செய்து உடனடியாக வழங்க உள்ளனர். என ஆர்.டி.ஓ., சாந்தி, தாசில்தார் சிவராமன் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment