தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரிடம் மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாதாந்திர உதவித்தொகை உத்தரவு நகல் பெற்ற சுமார் 600 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 மாதங்களாக உதவித்தொகை கிடைக்கவில்லை உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க கேட்டு மனு அளிக்கப்பட்டது.


மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனை கேட்டு மனு செய்யப்பட்டு இருந்தது தாலுகா அளவில் விசாரணை செய்து முடிக்கப்பட்டுள்ளது இன்னும் இலவச வீட்டு மனை வழங்கவில்லை விசாரணைமுடிந்தவார்களுக்கு உடனே இலவச வீட்டு மனை கேட்டு மனு அளிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டையை (ரேஷன் கார்டு) AAYகார்டுகா மாற்றி தர மனு அளிக்கப்பட்டது. இதில் A .பாலமுருகன் - மாவட்ட செயலாளர், P.வீரமணி - மாவட்ட தலைவர், V.மாரியப்பன் - மாவட்ட பொருளாளர், T. குமரவேல் MC - மாவட்ட இணை செயலாளர், A.பாண்டி - மாவட்ட உதவி தலைவர், K.தவமணி - புறநகர் மாவட்ட தலைவர், M. சொர்ண வேல் - காதுகேளாதோர் அமைப்பின் மாநில செயலாளர், S.ராஜேந்திரன், M.முருகேசபாண்டி, AV.வேலு - மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment