மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடியில், உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம், சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால் நடத்தப்பட்டது. சுங்கச்சாவடி சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் அருகில், ரத்ததான முகாமை திருமங்கலம் காவல் துணைக்கண்காணிப்பாளர் வசந்தகுமார் தொடங்கிவைத்தார்.


இம்முகாமில், பணிபுரியக்கூடிய அலுவலர்கள் முதல் துப்பரவு பணியாளர்கள் வரை உள்ள 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கியும், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதிமொழியும் ஏற்றனர். மேலும், திருமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலுவலர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, முகாமில் சேகரித்த இரத்தத்தினை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment