
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆசாதி சாட் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்திற்கு சென்று டெல்லியில் நடைபெற்ற நாசா விண்கலகத்திற்கு செல்வதற்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். இதில் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுநரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றனர் .இப்பாராட்டு விழாவில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சி திலகவதி உதவி தலைமை ஆசிரியர் கர்ணன் மற்றும் பொறுப்பாசிரியர் சிந்தியா ஆகியோர் கலந்துகொண்டு ஆளுனரிடம் பாராட்டு சான்றிதழ்களை பெற்றனர்.
அறிவியல் சார்ந்த கல்வியே இன்றைய காலகட்டத்திற்கு தேவையாக உள்ளது என ஆளுநர் கூறினார். இதுபோன்ற அரசு பள்ளி மாணவிகளின் பங்களிப்பு மற்றும் தனித் திறமையை ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் ஒவ்வொரு மாணவ மாணவியர்கள் திறமைகளை வெளி கொண்டு வரவேண்டும் என்று பாராட்டினார்.
No comments:
Post a Comment