சமயநல்லூர் அருகே தோடனேரியில் இலவச கணினி பயிற்சி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 9 May 2023

சமயநல்லூர் அருகே தோடனேரியில் இலவச கணினி பயிற்சி.


மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே தோடனேரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன், பெட்கிராட் இணை ந்து கிராம மக்களுக்காக பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு கோடை கால இலவசகனிணி பயிற்சியின் துவக்க விழா நடந்தது. 

இந்த விழாவிற்கு, பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார், ஜி.எச் .சி.எல். துணை பொது மேலாளர் அசோக்குமார் துவக்கி வைத்தார், கிருஷ்ண வேணி வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், சி.எஸ்.ஆர் அலுவலர் சுஜின் தர்மராஜ், பெட்கிராட் நிர்வாகிகள் அங்குசாமி, மார்ட்டின் காதர் சிங் ஆகியோர் பேசினர், இதன் ஏற்பாடுகளை, பயிற்சியாளர் கள் கீர்த்தி ராஜ்,ஷீபா, கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர், முடிவி ல் சமுதாய வளர்ச்சி பணியாளர் அமராவதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad