அப்போது சென்னையை சேர்ந்த அசீர் ஏசா என்பவர் தனது குடும்பத்தினர் வினோஜா மற்றும் ஈஸ்வரியுடன் விரகனூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார் அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த முத்துப்பாண்டி சரக்கு வாகனம் மீது அதிவேகமாக மோதியதில் வேன் தலை குப்புற கவிழ்ந்தது.

மேலும் கட்டுப்பாடை இழந்த கார் டீக்கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களின் மீது மோதி நின்றது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்த அசீர் ஏசா குடும்பத்தினரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இந்த விபத்தில் டீக்கடை முன்பு நின்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி நிற்கும் சிசிடிவி காட்சிகளும் விபத்து நடந்த பிறகு அந்தப் பகுதியில் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment