இந்நிலையில் நேற்று நள்ளிரவு மதுரை விமான நிலைய ஓடுபாதை காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து வாலிபர் கிலியன் மார்டி உள்ளே சுற்றி திரிந்துள்ளார். இதனை சி.ஐ.எஸ்.எப். ஆய்வாளர் துருவேய் குமார் ராய் தலைமையில் வீரர்கள் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து அவனி யாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் கிலியன் மார்டி மனநலம் பாதிக்கப் பட்டவர் என்பது தெரிய வந்தது. மனநிலை சரியில்லாததால் வேலைக்கு அனுப்பாமல் மகனை தன்னுடன் வைத்திருப்ப தாகவும், இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டி ருந்த போது எங்களுக்கு தெரியாமல் மகன் விமான நிலையத்திற்குள் சென்று விட்டதாகவும் தந்தை யுகில் மார்டி தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் கிலியன் மார்டி மீது வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் மதுரை விமான நிலையத்திற்குள் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment