கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை தெரிவித்தனர். தலைவர் ரம்யா முத்துக் குமார் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தின்படி திருமங்கலம் நகரில் 1,952 தெருவிளக்குகளை பொது மக்களின் நலன்கருதியும், நகராட்சி நிதி நிர்வாகத்தை கருதியும் எல்.இ.டி. தெரு விளக்குகளாக மாற்ற வேண்டும் என்றார். இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

திருமங்கலம் நகரில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் விரைவில் எல்.இ.டி.தெரு விளக்குகளாக மாற்றுவது எனவும், இதற்கு ரூ.2 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்வதும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் நகரின் விரிவாக்கப்பகுதிகளில் 534 எல்.இ.டி. தெரு விளக்குகள் புதிதாக அமைக்க ரூ.1 கோடியே 7லட்சத்து 70 ஆயிரம் மாநில நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் அமைப்பதும் என்றும் முடிவு செய்யப் பட்டது.
இந்த திட்டத்தின் நிதியை நகராட்சிக்கு கடனாக வழங்குவதுடன், இந்த கடனை 6 ஆண்டுகளுக்குள் 5 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. சுகாதாரத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ரூ.64.60 லட்சம் மதிப்பீட்டில் 6 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் அகற்றுதல் உறிஞ்சு வாகனம் வாங்குவது, 15-வது நிதிக்குழு மானியத்தில் 2022-23-ல் ரூ.10.60 லட்சம் மற்றும் ரூ.13.40 லட்சம் மதிப்பீட்டில் முறையே பேவர் பிளாக்சாலை மற்றும் தார்சாலை பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருமங்கலம் ெரயில்வே பீடர் ரோட்டில் யூனியன் அலுவலகம் முதல் ரயில்வேகேட் வரையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment