சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா அக்னிசட்டி ,பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 31 May 2023

சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா அக்னிசட்டி ,பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு.


மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டப்புளி நகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் வைகாசி மாத உற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் விரதம் இருந்து தங்கள் வேண்டுதலை துவக்கினர். 


செவ்வாய்க்கிழமை மாலை நையாண்டி மேளம் கரகாட்டத்துடன் முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு எடுத்தல், புதன்கிழமை காலை சமயநல்லூர் அருகே வைகைஆற்றில் இருந்து தியேட்டர் பாதை வழியாக திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வழியாக பக்தர்கள் அக்னிசட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சப்பர ஊர்வலத்துடன்  பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்தனர். 


பின்னர் திருக்கோவிலை அடைந்து அம்மனுக்கு பால், தயிர், வெண்ணெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை முளைப்பாரி கரைத்தல், அன்னதானம் நடைபெற்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேனூர் கட்டபுளிநகர் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad