

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு எத்தனை பேர் உறுப்பினர்களாக சேர வேண்டுமோ அந்தந்த கிராமங்களில் உள்ள அதிமுக கிளைச் செயலாளர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்களை ஏமாற்றி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கிராமங்களிலும் நிதி நெருக்கடியினால் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டம் மற்றும் குடிமராமரத்து வேலைகள் கிடப்பில் இருக்கிறது ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் சிங்கப்பூர் ஜப்பான் என்று வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர் எப்படி மக்களுக்காக ஆட்சி நடத்துவார் என்று சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய செயலாளர்கள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கிளைச் செயலாளர் வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment