24.5.23 இன்று மதுரை ஓ. சி. பி.எம் .பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .கா. கார்த்திகா அவர்கள் தலைமையில், மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி, மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி அவர்கள் முன்னிலையில், உதவி திட்ட அலுவலர் சரவணன் முருகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட அளவிலான பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான செயல்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் சார்ந்து அனைத்து வட்டார வளமைய மேற்பார்வை பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், புள்ளியியல் அலுவலர், Tamilnadu Education Fllowship குழு உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


பயிற்சியை துவக்கி வைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பேசுகையில், மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டவுடன் உடனடியாக பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற உறுதியை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள், பொருளாதார சூழ்நிலையால் பள்ளிக்கு வராத மாணவர்கள், என அனைவரையும் கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் மூலமும் உடனடியாக பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என்பது அனைவரின் முக்கிய கடமையாகும். பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத மாவட்டமாக மதுரை உருவாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொண்டார்.
பயிற்சியின் தொடக்க நிகழ்வாக மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை சார்ந்த பாதுகாப்பு அலுவலர், சமூக பாதுகாப்பு துறை. டயானா அவர்கள் குழந்தை திருமணம், பள்ளி செல்லா குழந்தைகளை எவ்வாறு கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது, குழந்தைகள் பாதுகாப்பு மையம் எவ்வாறு இதற்கு உதவி புரிகிறது என்பதை பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தெளிவாக விளக்கினார்.
மேலும் பள்ளி செல்லா குழந்தைகள் சார்ந்து, கணக்கெடுப்பு மற்றும் கண்டறியப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், மூவடுக்கு குழு(மாவட்ட ஆட்சியர் அளவில், மாவட்ட அலுவலர்கள் அளவில், பள்ளி அளவில்) அமைத்தல், மற்றும் EMIS சார்ந்த பயிற்சியினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளி செல்லா குழந்தைகள் அமுதா, அளித்தார்.
No comments:
Post a Comment