சித்திரை மாதம் பிறந்து விட்டாலே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் விசேஷமாக திருவிழாக்கள் நடக்கும். ஆனால் சித்திரை மாதத்திற்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி 11 நாள் விழா கோலாகலம் இருக்கும் அதில் மிகவும் பிரசித்தி பெற்றது மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி.
அதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் திருமாங்கல்யம் செய்த ஊர் என்பதால் அதற்கு திருமங்கலம் என்ற பெயர் வந்தது. அங்கே வீட்டில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று வேத மந்திரங்கள் முழங்கி சிவாச்சாரியார்கள் திருக்கல்யாண வைபவத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

இதில் புதிதாக திருமணம் நடந்தேறிய தம்பதியினர் மாங்கல்யம் மாற்றிக் கொண்டனர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மீனாட்சி சொக்கநாதரை வணங்கி அருள் பிரசாதம் வாங்கிச் சென்றனர். இன்று மாலை 6 மணி அளவில் மீனாட்சி சொக்கநாதர் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
No comments:
Post a Comment