

பிளாஸ்டிக் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆண்டுதோறும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளும் நிலையில் எங்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பல ஓட்டல்களில் விலை பட்டியல் வைக்கப்படா ததால், அவைகளை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள் அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் பல ஓட்டல்களில் நல்ல குடிநீரும் கொடுப்ப தில்லை. கேன் தண்ணீர் வழங்காமல் ஆர்.ஓ. வாட்டர் என்று எதையோ கொடுக்கின்றனர்.
பாட்டில் தண்ணீருக்கும் விலை வைத்து தனியாக பணம் வாங்கிக் கொள்கின்றனர். எனவே ஓட்டலில் சாப்பிடும் மக்களுக்கு நல்ல தண்ணீர் வழங்குவதில்லை. அவைகளை கவனிக்க உணவு பாதுகாப்பு அதிகாரி கள் இருந்த போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment