இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செஞ்சிலுவை சங்கம் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது.கடந்த கோரான நோய்த்தொற்று காலங்களில் இந்தியன் ரெட் கிராஸ் முதலுதவி செய்து நூற்றாண்டு விழா கொண்டாடியது.ஆனால் இன்று அந்த சங்கம் இருக்கிறதா இல்லையா என்பது கூட மக்களுக்கு தெரிவதில்லை.

ஏன் என்றால் திருமங்கலத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திலன் பின்புறம் அமைந்துள்ளது. பெரும்பாலும் மூடியே கிடைக்கின்றது. மேலும் அந்த இடம் மது அருந்தும் இடமாக அமைந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சமூக அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இப்பொழுது செயல்பாட்டில் இல்லை. இதை உடனடியாக சரி செய்து மறுபடியும் நோய் தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில் சங்கம் செயல்பாட்டில் இருந்தால் தான் சாலை ஓரங்களில் ஆதரவற்ற முதியவர்களை மீட்பதற்கு ஏதுவாக இருக்கும்.
சங்கத்திற்கு தலைவர் திருமங்கலம் வட்டாட்சியர் அவரும் எதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதை உடனடியாக பயன் பாட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
No comments:
Post a Comment