ஒரே நாளில் எட்டு வேளாண் விளைபொருள்கள் இ-நாம் ஏலமுறையில் விற்பனை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 30 May 2023

ஒரே நாளில் எட்டு வேளாண் விளைபொருள்கள் இ-நாம் ஏலமுறையில் விற்பனை.


திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள,  திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (30/05/2023) உசிலம்பட்டியை  சேர்ந்த  ஒரு  விவசாயியின் 1074  கிலோ வரகு  ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 34 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 36516 -க்கு விற்பனை நடைபெற்றது. அடுத்து சோலைபட்டியை  சேர்ந்த  ஒரு  விவசாயியின் 819.800  கிலோ இருங்கு சோளம்  ஏலத்திற்கு வந்தது.  

அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 38.50 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ  31513-க்கு விற்பனை நடைபெற்றது. அடுத்ததாக கோவில்பட்டியை  சேர்ந்த  ஒரு  விவசாயியின் 602  கிலோ சூரியகாந்தி விதை  ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 46 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 27727 -க்கு விற்பனை நடைபெற்றது. மேலும் செங்கப்படையை  சேர்ந்த  ஒரு  விவசாயியின் 970  கிலோ குதிரைவாலி  ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 50 க்கு விலை போனது. 



இதன் மூலம் ரூ 48500 -க்கு விற்பனை நடைபெற்றது. மேலும் திருமங்கலத்தை  சேர்ந்த  ஒரு  விவசாயியின் 253  கிலோ நிலக்கடலை பருப்பு  ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 105 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 26460 -க்கு விற்பனை நடைபெற்றது. அடுத்ததாக சேடபட்டியை சேர்ந்த சதுரகிரி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை சேர்ந்த 550  கிலோ கம்பு ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 27 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ  14900-க்கு விற்பனை நடைபெற்றது.  மேலும் தங்களாச்சேரியைச்  சேர்ந்த  ஒரு  விவசாயியின் 7850  கிலோ கம்பு  ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 24 க்கு விலை போனது. 


இதன் மூலம் ரூ 188400 -க்கு விற்பனை நடைபெற்றது. மேலும் தங்களாச்சேரியை சேர்ந்த  ஒரு  விவசாயியின் 3000 கிலோ மக்காச்சோளம்  ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 20.80 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 62400 -க்கு விற்பனை நடைபெற்றது. அடுத்ததாக செங்கப்படையை  சேர்ந்த  ஒரு  விவசாயியின் 49  கிலோ கேப்பை ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 27 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 1323 -க்கு விற்பனை நடைபெற்றது. இன்று மட்டும் எட்டு வேளாண் விளைபொருட்கள் பன்னிரெண்டு குவியல்களாக விற்பனையானதன் மூலம் ரூ 437689 க்கு வர்த்தகம் நடைபெற்றது.


மேலும் விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

No comments:

Post a Comment

Post Top Ad